காட்டுத் தீ காரணமாக கனடா உலகிற்கு மேசமான பங்களிப்பினை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுத் தீ காரணமாக சுற்றுச்சூழல் கூடுதலாக மாசடைந்த நாடாக கனடா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் இந்த ஆண்டில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக வெளியிடப்பட்ட கார்பனின் அளவு கனடாவில் மிக அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுத் தீ
காட்டுத் தீ காரணமாக உலகளவிய ரீதியில் வெளியிடப்பட்ட கார்பனில் 23 வீதமானவை கனடிய காட்டுத்தீயினால் வெளியிடப்பட்டுள்ளது.
காட்டுத் தீ காரணமாக காற்றின் தரம் மாசடைந்துள்ளதுடன், சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த 2023ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான காட்டுத் தீ பரவுகை கனடாவில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டில் கனடாவில் காட்டுத் தீ காரணமாக 480 மெகாதொன் எடையுடைய கார்பன் வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பேர்ட்டா, நோவா ஸ்கோஷியா கியூபெக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத் தீ நீண்ட நாட்களாக நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.