Reading Time: < 1 minute

ரெட் லேக்கில் ஏற்பட்ட காட்டுத் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால், தற்போது குடியிருப்பாளர்கள் மீள தங்களது வீட்டுக்கு செல்ல முடிகின்றது என மேயர் பிரெட் மோட்டா தெரிவித்துள்ளார்.

மேயர் பிரெட் மோட்டா இதுகுறித்து முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒகஸ்ட் 10ஆம் திகதி திங்கள் அதிகாலை முதல், எங்கள் சமூகம் தீவிர நிச்சயமற்ற நிலையில் உள்ளது. இது சவாலானது மற்றும் சில நேரங்களில் நம் அனைவருக்கும் மிகவும் மன அழுத்தமாக உள்ளது.

ஒரு சமூகமாக எங்கள் நெகிழ்ச்சியின் மூலமாகவும், நமது அண்டை சமூகங்களின் கருணையுள்ள உதவியுடனும், மிக மோசமாக இருந்திருக்கக்கூடிய ஒன்றை நாம் வென்று சகித்துள்ளோம். நம் வீடுகள், குடும்பங்கள் மற்றும் செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி கூறுகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

திங்களன்று ஒரு தன்னார்வ வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டது. அப்போது தீ – ரெட்049 அல்லது ரெட் லேக் 49 என அழைக்கப்பட்டது. இதன்போது 3,500க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேறினர்.