காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கனடா உள்ளிட்ட சில நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கனடா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.
காசாவின் ராஃபா பகுதியில் இஸ்ரேல் படையினர் பாரிய தாக்குதல்களை நடத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் நடத்தப்பட்டால் பாரியளவில் மனிதப் பேரவலம் ஏற்படும் எனவும் பலஸ்தீன மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்குவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக போரை நிறுத்துமாறு கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கோரியுள்ளன.
ஐக்கிய நாடுகளின் பிரகடனங்களுக்கு அமைவாக போர் நிறுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டிது அவசியமானது என கனடா உள்ளிட்ட நாடுகள் குறிப்பிட்டுள்ளன.