காசாவிலிருக்கும் கனேடியர்களின் உறவினர்களுக்கு கனடா தற்காலிக விசா வழங்க இருப்பதாக, கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காசாவிலிருக்கும் சுமார் 660 கனேடியர்கள், நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள் மற்றும் அவர்களுடைய கணவன் அல்லது மனைவி பிள்ளைகளை காசாவிலிருந்து வெளியே கொண்டுவர கனடா இலக்கு வைத்துள்ளதாக கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர் (Marc Miller) தெரிவித்துள்ளார்.
கனேடியர்களின் பெற்றோர், தாத்தா பாட்டி, சகோதர சகோதரிகள் மற்றும் பேரன் பேத்திகள் உட்பட குடும்ப உறவுடைய தூரத்து உறவினர்கள் முதலானவர்களின் விண்ணப்பங்களை கனடா அரசு பெறத் துவங்க இருப்பதாக தெரிவித்துள்ள மார்க் மில்லர், தகுதி பெற்றவர்களுக்கு மூன்று ஆண்டு விசாக்கள் வழங்கப்படும் என்றார்.
இருந்தாலும், கனேடியர்களை காசாவிலிருந்து வெளியே கொண்டுவருவது கடினமானதாகவே இருந்துள்ளது என்று கூறியுள்ள அவர், ஆகவே, காசாவிலிருப்பவர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியே கொண்டுவருவதற்கு பெடரல் அரசு உறுதியளிக்கமுடியாது என்றும் கூறியுள்ளார்.