Reading Time: < 1 minute

கனடாவின் டொரன்டோ நகரில் அமைந்துள்ள கார் விநியோக நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் களவாடப்பட்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளனர்.

குறித்த நபர்களுக்கு எதிராக சுமார் 176 குற்றச்சாட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக இந்த நபர்கள் இவ்வாறு களவாடப்பட்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு கார் விநியோக நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மோசடியான முறையில் களவாடப்பட்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

தங்களது நிறுவன பதவி நிலையை பயன்படுத்தி இந்த நபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கார் விநியோக நிறுவனத்தில் பணியாற்றி வரும் காரணத்தினால் கார்களை கொள்வனவு செய்பவருக்கு எவ்வித சந்தேகமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் இருவரும் சுமார் 22 வாகனங்களை மோசடியான முறையில் விற்பனை செய்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.