கல்கரியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய, சந்தேக நபர் தொடர்பான வரைபடமொன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு, இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
20 வயதுக்கு இடைப்பட்டவராக கருதப்படும் இந்த சந்தேகநபர், கருப்பு அடத்தியான முடி, சுமார் ஐந்து அடி ஒன்பது அங்குலம் உயரம் கொண்டவரெனவும் எயார் ட்ரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எயார் ட்ரை பொலிஸாரின் பொது விசாரணை சேவைகள் மற்றும் குற்றக் குறைப்புப் பிரிவின் உதவியுடன், அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
தென்மேற்கு எயார் ட்ரை பகுதியில் கடந்த சனிக்கிழமை 22 வயதான ஒருவர், துப்பாக்கி காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவரது காயங்கள் உயிராபத்தானவை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.