Reading Time: < 1 minute
கல்கரியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் இரண்டு தீயணைப்புப் படைவீரர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்கரியின் தென்கிழக்கு பகுதியில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
சில வீடுகள் தீப்பற்றிக்கொண்டதாக தீயணைப்புப் படையினருக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தீ விபத்தின் போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொதுமக்களும் இரண்டு தீயணைப்புப் படைவீரர்களும் காயமடைந்துள்ளனர்.
வீடுகளில் தங்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சியின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.