அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை இரத்துச் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளமை கொடூரமானது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
கருக்கலைப்பு செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமையை இழக்க நேரிடும் பெண்களுக்கு அவர் அனுதாபம் தெரிவித்தார்.
அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ரோ மற்றும் வேட் (Roe v.Wade) இடையிலான வழக்கில், ‘கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அது அரசியலமைப்பு உரிமை’ என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதேபோல, 1992ஆம் ஆண்டில் பெனிசில்வேனியா மற்றும் கேசே இடையிலான வழக்கில், ’22 முதல் 24 வார கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்’ என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் மைல்கல்லாக தீர்ப்பாக இருந்த 50 ஆண்டுகால கருக்கலைப்பு உரிமை தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் பயங்கரமானது. கருக்கலைப்பு செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமையை இழக்க நேரிடும் மில்லியன் கணக்கான அமெரிக்கப் பெண்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் ட்ரூடோ கூறியுள்ளார்.
பெண்களுக்குள்ள உரிமையில் எந்த அரசாங்கமோ, அரசியல்வாதியோ, ஆணோ தலையீடு செய்யக்கூடாது. தங்களது சுய வருப்புக்கு ஏற்ப, உடல் நிலைமைக்கேற்ப தீா்மானிக்கும் அதிகாரம் பெண்களுக்கு இருக்க வேண்டும் எனவும் கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கருத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை இரத்துச் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரம் இனி தேசிய அளவிலின்றி மாகாணங்களுக்கு இருக்கும்.
அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ரோ மற்றும் வேட் (Roe v.Wade) இடையிலான வழக்கில், ‘கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அது அரசியலமைப்பு உரிமை’ என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதேபோல, 1992ஆம் ஆண்டில் பெனிசில்வேனியா மற்றும் கேசே இடையிலான வழக்கில், ’22 முதல் 24 வார கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்’ என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வெளியான தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகளில் மாற்றம் ஏற்படும். கருக்கலைப்பு நடைமுறைக்கு தடை விதிக்க இனி மாகாணங்கள் நடவடிக்கை மேற்கொள்ளும்.
அநேகமாக அமெரிக்கா மாகாணங்களில் பாதியாவது கருக்கலைப்புக்கு தடை விதிக்க ஏதுவாக புதிய சட்டம் அல்லது கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் சட்டங்களை 13 மாகாணங்கள் இயற்றியுள்ளன. மற்றவை சில புதிய கட்டுப்பாடுகளை விரைவாக நிறைவேற்ற வாய்ப்புள்ளது.
மொத்தத்தில், கருத்தரிக்கும் வயதுடைய சுமார் 36 மில்லியன் பெண்கள் கருக்கலைப்புக்காக செல்ல முடியாத நிலையை இது ஏற்படுத்தும் என்று பிளாண்ட் பேரன்ட்ஹுட் (plant parenthood) என்ற கருக்கலைப்பு சேவை வழங்கும் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.