Reading Time: < 1 minute

கம்லூப்ஸில் உள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், கட்டிடமொன்று முற்றிலுமாக ஏரிந்து நாசமாகியுள்ளது.

பார்க் கிறிஸ்ட் ஆரம்ப பாடசாலையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை 5.15 மணியளவில், இந்த தீ விபத்து சம்பவித்துள்ளது.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, கூரையிலிருந்து கருப்பு புகை வருவதைக் காண முடிந்ததாகவும், இதன்போது ஒரு காவலர் கட்டிடத்தில் உள்ளே இருந்து, பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் 30இற்க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களின் கடுமையான போராட்டத்திற்கு பின்னர், இரவு 7:30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

எனினும், அருகிலுள்ள கட்டிடங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும், இந்த தீ விபத்தின் யாரும் காயமடையவில்லை என்ற போதிலும், பாடசாலையில் செல்லமாக வளர்த்த முயல் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1960களில் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த பாடசாலையில், 350இற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.