கம்போடியாவிற்கும் லாவோசிற்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக கனடா அரசாங்கம் உறுதி வழங்கியுள்ளது.
கம்போடியாவிலும், லாவோஸிலும் நிலக்கண்ணி மற்றும் கொத்தணி குண்டுகளை அகற்றுவதற்கு உதவிகள் வழங்குவதாக கனடா அறிவித்துள்ளது.
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். சுமார் ஒரு மில்லியன் டொலர் உதவி வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
விட்னாம் சிவில் யுத்தம் மற்றும் உள்நாட்டு சிவில் போர்கள் காரணமாக கம்போடியாவில் நிலக்கண்ணி வெடிகள் மற்றும் கொத்தணி குண்டுகள் புதைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான குண்டுகள் வெடிபொருட்கள் பயன்படுத்துவதனை கனடா தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1990ம் ஆண்டு முதல் கனடா இந்த உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கம்போடியாவில் நடைபெற்றும் மாநாட்டில் பிரதமர் ட்ரூடோ பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.