அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான ஒரு பின்னணியில் ஹரிஸ் கனடாவுடன் எவ்வாறு தொடர்புபட்டுள்ளார் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அந்த வகையில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹரிஸ், கனடிய உயர்நிலை பள்ளியொன்றில் கல்வி கற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
மொன்றியாலில் காணப்படும் மொன்றியாலின் பெஸ்ட் மவுண்ட் உயர்நிலைப் பள்ளியில் ஹரிஸ், 1978 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரையில் கற்றுள்ளார்.
ஹரிஸின், கமலா ஹரிஸின், தயாரான சியாமளா கோபாலன் மார்பக புற்றுநோய் குறித்த ஓர் ஆய்வாளர் என தெரிவிக்கப்படுகிறது.
சியமளா மொன்றியாலில் கடமை ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலா ஹரிஸ் மற்றும் அவருடைய சகோதரி மாயா ஹரிஸ் ஆகியோர் கனடாவில் பள்ளிக்கூடத்தில் கற்றபோது சிறந்த திறமையான மாணவியர்களாக செயல்பட்டனர் என அவர்களது வகுப்பு தோழர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் போட்டியிடுவதனை கட்சியின் பல்வேறு முக்கியஸ்தர்கள் ஆதரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.