Reading Time: < 1 minute

கனேடிய மத்திய வங்கி தனது வட்டி வீதத்தினை அரை வீதத்தினால் உயர்த்தியுள்ளதாக (Oct 26, 2022) அறிவிக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு உயர்வடைந்துள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

எதிர்வரும் 2023ம் ஆண்டில் பணவீக்கம் மூன்று வீதமாக குறைவடையும் எனவும் 2024ம் ஆண்டில் பணவீக்கம் 2 வீதமாக பேணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் வருடாந்த பணவீக்க வீதம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 6.9 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் மளிகைப் பொருட்களுக்கான விலைகள் தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.