Reading Time: < 1 minute
கனேடிய மக்கள் தாங்கள் விரும்பிய மொழியில் சான்டா அல்லது நத்தார் தாத்தாவிற்கு கடிதம் எழுத முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா போஸ்ட் நிறுவனம் இது தொடர்பிலான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
கனடா போஸ்ட் எனப்படும் அஞ்சல் சேவை நிறுவனம் இன்ஸ்டா கணக்கில் 38 மொழிகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்கைள் தங்களது மொழியில் தத்தார் தாத்தாவிற்கு கடிதம் எழுதி அனுப்பி வைக்க முடியும் எனவும், அதற்கு பதிலளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து குழந்தைகளும் சான்டாவிற்கு முக்கியமானது எனவும் அதனால் அனைத்து மொழிகளிலும் பதிலளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 9ம் திகதிக்கு முன்னதாக கடிதங்களை அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது. கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி:
Santa Claus
North Pole
H0H 0H0
Canada