கனடாவின் பொருளாதார நிலைமை குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் நான்காம் காலாண்டு பகுதியில் நாட்டின் பொருளாதாரம் மந்த கதியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
குறிப்பாக எதிர்பார்க்கப்பட்ட அளவினை விடவும் கடந்த ஆண்டு நான்காம் காலாண்டின் பொருளாதார வளர்சசி குறைவாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்து காலாண்டு பகுதிகளில் தொடர்ச்சியாக வளர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் 2022ம் ஆண்டின் இறுதிக் காலாண்டு பகுதியில் பொருளாதார வேகம் மாற்றமின்றி காணப்படுகின்றது.
வட்டி வீத அதிகரிப்பானது பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான வளர்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் வருடாந்த பணவீக்க வீதம் கடந்த ஜனவரி மாதம் 5.9 வீதமாக குறைவடைந்துள்ளது.
மெய்யான மொத்த தேசிய உற்பத்தியில் 0.3 வீத வளர்ச்சி பதிவாகியுள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.