Reading Time: < 1 minute

கனேடிய பொருளாதாரத்தின் பாதுகாப்பான மறுதொடக்கத்திற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்று துணைப்பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் உதவுவதற்காக ஒதுக்கப்பட்ட 14 பில்லியன் டொலர்களுக்கான அரசாங்கத்தின் திட்டங்களைப் குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நாங்கள் உண்மையிலேயே அடிக்கோடிட்டுக் காட்ட விரும்பும் மற்றொரு விடயம் என்னவென்றால், இப்போது பேசுவது பாதுகாப்பான மறுதொடக்கம். எனவே இது ஒரு நீண்ட கால திட்டம் அல்ல.

இது அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் பாதுகாப்பான மறுதொடக்கத்தை உறுதி செய்வதற்காகவே. நாங்கள் கவனம் செலுத்துகின்ற காலக்கெடு இது என்பதை கனேடியர்கள் புரிந்துகொள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்’ என கூறினார்.