கனடாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற சமஸ்டி தேர்தலின் போது சீனா தலையீடு செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என கனேடிய பிரதம தேர்தல் அதிகாரி ஸ்டீபன் பெராலெட் (Stéphane Perrault ) தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலின் போது சீன அரசாங்கம் பல வழிகளில் தேர்தலில் தலையீடு செய்ததாகவும் 11 வேட்பாளர்களுக்கு நிதி உதவி வழங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கனடிய பிரதமர் ஜஸ்டின் டுடே விற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சீன தலையீடு தொடர்பிலோ சட்டத்திற்கு முரணான வகையில் தேர்தல்கள் நடத்தப்பட்டவை குறித்து எவ்வித முறைப்பாடுகளும் அல்லது அறிக்கைகளோ தமக்கு கிடைக்கவில்லை என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் தொடர்பில் அதிக உச்ச மரியாதை கொண்டிருப்பதாகவும் எனினும் எந்த ஒரு விடயம் தொடர்பிலும் இறுதியான தீர்ப்பு கிடைக்கும் முன்னதாக வெளியிடப்படும் ஊகங்கள் ஏற்புடையதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலின் போது வெளிநாட்டு சக்திகளின் தலையீடு காணப்பட்டதாக புளொக் கியூபிகோஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கனேடிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.