கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கொலை செய்த அவுஸ்திரேலியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Tatiana Dokhotaru (34), 2012ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். அவரது கணவர் ஒரு அவுஸ்திரேலியர். அவரது பெயர் Danny Zayat (28). தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறான்.
மே மாதம் 27ஆம் திகதி, Tatianaவின் உயிரற்ற உடல் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.
தன்னை, தன் கணவர் தாக்குவதாக Tatiana பொலிசாருக்கு தகவலளித்தும், 20 மணி நேரத்துக்குப் பிறகுதான் பொலிசார் அந்த வீட்டுக்குச் சென்றுள்ளார்கள்.
தான் எங்கிருக்கிறேன் என்பதை Tatiana கூறும் முன் அவரது மொபைல் அழைப்பு துண்டிக்கப்பட்டதால் பொலிசார் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Tatianaவை அவரது கணவர் தங்கள் மகனுடைய கண் முன்னே தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திங்கட்கிழமை அவுஸ்திரேலிய பொலிசார் Dannyயைக் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Danny மீது ஏற்கனவே மனைவியைத் தாக்கியதாக சுமார் 20 குற்றச்சாட்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள Danny நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.