Reading Time: < 1 minute

கனேடிய பெண்கள் இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவற்றினால் இளவயதிலேயே மரணிக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவின் இருதய மற்றும் பக்கவாத அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயை கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகிய விடயங்களில் பின்தங்கிய நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாரடைப்பு ஏற்படும் அரைவாசிக்கும் மேற்பட்ட பெண்களுக்கான நோய் அறிகுறிகள் அவதானிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஆண்களுக்கான நோய் அறிகுறிகளும் பெண்களுக்கான நோய் அறிகுறிகளும் வித்தியாசமானவை என்பது புரிந்து கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இளம் பெண்களுக்கு இருதய நோய் ஏற்படும் நிலைகள் அதிகரித்துள்ளதாக வான்கூவர் இருதய நோய் நிபுணர் டொக்டர் டாரா செட்லாக் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப கட்டத்திலேயே நோய் அறிகுறிகளை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கத் தவறினால் பேராபத்துக்களை எதிர்நோக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.