கனடாவின் உறைவிடப் பள்ளி விவகாரத்தில் கத்தோலிக்க திருச்சபையின் பங்கிற்காக போப் பிரான்சிஸ் மன்னிப்புக் கோரியுள்ளார்.
கனேடிய பூர்வக்குடி மக்களின் தலைவர்கள் மற்றும் போப் பிரான்சிஸ் இடையே வாடிகனில் தனிப்பட்ட சந்திப்பு நடந்ததன் பின்னரே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதில் அவர், முழு மனதுடன் நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன், நான் மிகவும் வருந்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். உறைவிடப் பள்ளி விவகாரத்தில் அவரது கருத்தை கேட்க பலர் நீண்ட காலமாக காத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், கனடாவில் பயணம் மேற்கொள்ளவும் தாம திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 1800களின் பிற்பகுதியில் தொடங்கி, ஏறத்தாழ 150,000 பூவர்வகுடி குழந்தைகள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர வேண்டி கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இதனால் அவர்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தை ஆங்கிலம் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கைகளுடன் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், உறைவிடப் பள்ளிகள் அனைத்தும் கனேடிய அரசால் நிறுவப்பட்டிருந்தாலும், அவைகளை கிறிஸ்தவ தேவாலயங்களே நடத்தியுள்ளது. குறித்த பள்ளிகளில் சுமார் 4,100 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் பல எண்ணிக்கையிலான துஸ்பிரயோகங்களும் நடந்தேறியுள்ளது.
கடந்த 1996ல் கடைசியாக செயல்பட்டுவந்த உறைவிடப்பள்ளியும் மூடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் 1980களில் இருந்தே மக்கள் போராட்டங்களால் பல தேவாலயங்கள் மன்னிப்புக் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.