Reading Time: < 1 minute

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அமைச்சரவைக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

நாட்டில் நீதிமன்றங்களில் நிலவும் பதவி வெற்றிடங்களை பூர்த்தி செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றங்களில் நிலவும் பதவி வெற்றிடங்களுக்கு குறுகிய காலப் பகுதியில் நியமனங்களை வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி ஹென்றி பிறவுண் இவ்வாறு பிரதமருக்கு உத்தரவிட்டுள்ளார்.

லிபரல் அரசாங்கம்; பதவி வெற்றிடங்கள் தொடர்பில் அசமந்தப் போக்கினைப் பின்பற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

பதவி வெற்றிடங்களினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நீதிமன்றங்களில் சுமார் 75 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.