கனடாவின் Bowmanville உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒன்லைன் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாக தர்ஹாம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் இளைஞர் எனவும், அவர் ஒன்ராறியோ மாகாணத்தவர் அல்ல எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் ஆதாரங்கள் திரட்டி வருவதாகவும், அவரது கணினி உட்பட மொபைல்போன் என அவர் பயன்படுத்தியுள்ள பொருட்களை மீட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்கு பின்னரே, அவர் மீது வழக்கு பதிவது தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக ரொறன்ரோ துவக்கப்பள்ளி ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவரை பொலிசார் சுட்டுக்கொன்ற நிலையில், இந்த மிரட்டல் சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், டெக்சாஸ் பாடசாலையில் துப்பாக்கிதாரி இளைஞர் ஒருவர் 19 மாணவர்கள் மற்றும் இரு ஆசிரியர்களை படுகொலை செய்துள்ளதும் கனேடிய பாடசாலை நிர்வாகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.