Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணம் ஹமில்டனின் McMaster பல்கலைக்கழகத்தினால் புதிய கோவிட் தடுப்பு மருந்து வகையொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு மருந்தினைன தடுப்பூசியாக உடலில் ஏற்றிக்கொள்ளத் தேவையில்லை எனவும் இது நாசித் தூவாரம் வழியாக உறிஞ்ச வேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தடுப்பு மருந்தின் முதல் கட்ட பரிசோதனை வெற்றியளித்துள்ளதாகவும் இரண்டாம் கட்டமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த தலைமுறை தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட வேண்டிய அவசியம் வெகுவாக எழுந்துள்ளது என பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பிரிவு துணைத் தலைவர் டொக்டர் சீரன் மொஸமன் தெரிவித்துள்ளார்.

காச நோயாளர்கள் பயன்படுத்தும் உறிஞ்சக் கூடிய தடுப்பு மருந்து வகைக்கு நிகராக கோவிட் தொற்றுக்கும் மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றிக் கொள்வதனை விடவும் இந்த தடுப்பு மருந்து மிகவும் வீரியம் மிக்கது என்பது ஆரம்ப கட்ட பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

500 பேருக்கு இந்த தடுப்பு மருந்து வழங்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.