கனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக போராடுபவர்களுக்கு ஆதரவாக எதையாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் அமெரிக்க இளைஞர் ஒருவர்.
ஆனால், அவர் செய்த செயல் அவருக்கு தண்டனையை மட்டுமல்ல அவமானத்தையும் கொண்டுவந்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள Ohio என்ற இடத்தில் வாழும் அந்த 20 வயது நபர், கனேடியர்களுக்கு ஆதரவாக எதையாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்து, Ottawaவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆனால், முட்டாள்தனமாக தான் கனடாவின் தலைநகரான Ottawaவுக்கு தொலைபேசியில் அழைப்பதற்கு பதிலாக, அமெரிக்காவின் Ohioவிலுள்ள Ottawa என்ற இடத்திற்கு தொலைபேசியில் அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
ஒரு 20 வயது நபர் இப்படி ஒரு முட்டாள்தனமான செயலை செய்துள்ளார் என்று கூறிய அமெரிக்க பொலிஸ் அதிகாரியான Capt. Brad Brubaker என்பவர், அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இப்போது அவர் மீது விசாரணை நடத்த இரண்டு நகர அதிகாரிகளுமே முடிவு செய்துள்ளனர்.