Reading Time: < 1 minute
கனேடிய சமாதான செயற்பாட்டாளர் விவியன் சில்வர் ஹமால் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
விவியன் ஹமாஸ் போராளிகளினால் கடத்தப்பட்டிருக்கலாம் என முன்னதாக சந்தேகிக்கப்பட்டது.
எனினும், இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதல்களின் போது விவியன் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விவியனின் மரணத்தை அவரது புதல்வர் உறுதி செய்துள்ளார். விவியன் கனடாவின் வின்னிபெக்கில் பிறந்தவர் எனவும் பின்னர் இஸ்ரேலில் குடியேறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சமாதான செயற்பாட்டாளராக விவியன் பல்வேறு சேவைகளை வழங்கியுள்ளதாக பாராட்டப்பட்டுள்ளது.
விவியனின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.