Reading Time: < 1 minute

டெஸ்லா (Tesla) நிறுவனம் எதிர்வரும் பெ்பரவரி 1 முதல் கனேடிய சந்தையில் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்தது.

இது நுகர்வோரை கணிசமாக பாதிப்படைய செய்யும் அறிவிப்பாகும்.

குறிப்பாக டெஸ்லாவின் மொடல் 3க்கான விலைகள் 9,000 கனேடிய டொலர்கள் ($6,254.78) வரை அதிகரிக்கலாம்.

அதே நேரத்தில் மொடல் Y வகைகளின் விலைகள் 4,000 கனேடிய டொலர்கள் வரை உயரும்.

மொடல் S மற்றும் X இன் அனைத்து வகைகளும் 4,000 கனேடிய டொலர்களாக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பில்லியனர் எலோன் மாஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் விலை உயர்வுக்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை.

நிறுவனம் கனடாவில் கார்களை உற்பத்தி செய்வதில்லை மற்றும் பிற தொழிற்சாலைகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.

டெஸ்லா தனது ஷாங்காய், சீனா தொழிற்சாலை மற்றும் அமெரிக்காவில் உள்ள அதன் ஆலைகளில் இருந்து கனடாவுக்கு எத்தனை கார்களை ஏற்றுமதி செய்கிறது என்பது உடனடியாக வெளிப்படுத்தவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பெப்ரவரி 1 ஆம் திகதி 25% வரி விதித்தால் அதற்கு பதிலளிக்க தயாராக இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செவ்வாயன்று (21) மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் விலைகளை கணிசமாக அதிகரிக்கும் டெஸ்லாவின் அறிவிப்பு வந்துள்ளது.

ஷாங்காயில் தயாரிக்கப்படும் டெஸ்லா கார்கள் உட்பட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு கனடா ஏற்கனவே 100% வரி விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

($1 = 1.4389 கனேடியன் டொலர்)

Comments are closed, but trackbacks and pingbacks are open.