கனேடிய சந்தையில் விற்பனை செய்யப்படவிருந்த ஆயிரக் கணக்கான வாகனங்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வொக்ஸ்வோகன் ரக வாகனங்கள் இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. வொக்ஸ்வோகன் நிறுவனத்தின் 3759 இலத்திரனியல் அவுடி வாகனங்கள் இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
இந்த வாகனங்கள் விபத்து ஏற்படக்கூடிய சாத்தியங்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2019 மற்றும் இந்த ஆண்டு வரையில் விற்பனை செய்பய்பட்ட அவுடி A6 மற்றும் A7 ரக வாகனங்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
பின் ஆசனத்தில் ஏதேனும் திரவம் ஊற்றப்பட்டால் வாகனம் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் காணப்படுகின்றது.
இதனால் வாகனம் செலுத்தப்படும் போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் அவுடி இலத்திரனியல் வாகனங்கள் கனேடிய சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.