கனடாவின் சந்தைகளிலிருந்து அவசரமாக மாத்திரையொன்று மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
TUMS பண்டக் குறியைக் கொண்ட அன்டாசிட் மாத்திரைகளே இவ்வாறு சந்தையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
இந்த மாத்திரைகளில் கண்ணாடி துகள்கள் மற்றும் அலுமினியம் பொயில் துண்டுகள் என்பன கலந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய சுகாதாரத் திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 13 மாத்திரைகளைக் கொண்ட பக்கட்டில் விற்பனை செய்யப்பட்ட மாத்திரைகளே இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மாத்திரைகளை உட்கொண்டால் சமிபாட்டு வழியில் கண்ணாடித் துகள்கள் கலக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் உள்ளிட்ட சிலருக்கு இந்த மாத்திரைகள் உட்கொள்வதனால் ஆபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாத்திரைகள் காலாவதியாகும் திகதி 2027ம் ஆண்டு வரையில் காணப்படுவதாகவும், கடந்த ஒக்ரோபர் மாத இறுதியில் இந்த மாத்திரைகள் சந்தையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நெஞ்செரிச்சலுக்காக,அமிலத்தன்மை இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகின்றது.