கனேடிய இளம் மருத்துவர்கள் வெளிநாடு செல்ல மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் சுகாதார பணியாளர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இளம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் வெளிநாடு செல்வதற்கு நாட்டம் காட்டி வருகின்றனர்.
தங்களுக்கு நாட்டில் உரிய சந்தர்ப்பங்கள் கிடைக்கப் பெறுவதில்லை என இளம் மருத்துவர்கள் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான இளம் கனேடிய மருத்துவர்கள் நாட்டுக்கு வெளியே பயிற்சி சந்தர்ப்பங்களை எதிர்பார்ப்பதாக ஹாலிபிக்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டொக்டர் டெஸ்மன்ட் லெடின் தெரிவிக்கின்றார்.
மருத்துவ கற்கை நெறிகளை தொடர்வதற்கும் தங்களது துறைசார் அறிவினை விருத்தி செய்வதற்கும் கனடாவில் போதியளவு சந்தர்ப்பங்கள் கிடைக்கப் பெறுவதில்லை என சுட்டிக்காட்டுகின்றார்.
மருத்துவ மாணவர்களை கல்லூரிகளில் உள்ளீர்க்கும் நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட வேண்டுமென அவர் பரிந்துரைக்கின்றார்.
கனடாவின் பல வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.