Reading Time: < 1 minute

கனடிய வருமானவரித் திணைக்களத்தால் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் மாற்றங்கள் Online App கள் மூலம் வருமானம் சம்பாதிப்பவர்களைப் பாதிக்கலாம் எனக் கூறப்படுகிறது. GIG பொருளாதாரம் என வர்ணிக்கப்படும் Uber Eats, Skip the Dishes, Fiverr போன்ற Online Apps மூலம் பணம் சம்பாதிப்பவர்களும் குறுங்கால ஒப்பந்தங்கள் (Short Term Contracts) மற்றும் பதியாமல் தற்காலிக வேலைகளைச் செய்பவர்களும் (freelance work / web designers / business consultancy / translation services) இம்மாற்றத்தால் பாதிப்படையலாம் எனக் கருதப்படுகிறது.

Smart phone Apps களைப் பாவித்து வருமானம் ஈட்டுபவர்கள் தமது உண்மையான வருமானத்தை வரித்திணைக்களத்திற்கு அறிவிப்பதில்லை என்பதனால் அதை நிவர்த்தி செய்ய இனிமேல் இந்த App களை வழங்கும் தளங்கள் (platforms) அவற்றைப் பாவிப்பவகளின் பெயர், அடையாளம், வருமானம் போன்ற தகவல்களை நேரடியாக வருமான வரித் திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டுமென்பதே இப் புதிய சட்டம். இச்சட்டம் ஏற்கெனவே நடைமுறைக்கு வந்திருந்தாலும் 2024 ஆம் ஆண்டிற்கான வருமான வரி பத்திரங்கள் வருட முடிவில் தாக்கல் செய்யும்போது தான் இதன் தாக்கம் உணரப்படும். இச்சட்டத்தின்படி Gig தளங்களை நிர்வகிக்கும் Etsy, eBay, Poshmark, Airbnb, Vrbo, Uber ஆகிய நிறுவனங்கள் அவற்றின் பாவனையாளர்கள் சம்பாதிக்கும் உண்மையான வருமானங்களை ஜனவரி 31, 2025 இற்கு முன்னர் நேரடியாக வருமானவரித் திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.