Reading Time: < 1 minute
கனடிய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு இனி செய்திகளை பார்வையிட முடியாத நிலை உருவாகியுள்ளது.
முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பனவற்றின் தாய் நிறுவனமான மெட்டா இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
அரசாங்கம் இணைய செய்தி சட்டமொன்றை புதிதாக அறிமுகம் செய்துள்ளது.
கனடிய நாடாளுமன்றில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் பிரகாரம் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் நிறுவனங்கள் செய்திகளை பிரசூரிப்பதற்காக கனடாவிற்கு கட்டணம் செலுத்த வேண்டுமென்ற வகையில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நேற்றைய தினம் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக இது நடைமுறைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கட்டணம் செலுத்துவதற்கு குறித்த நிறுவனங்கள் விரும்பவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.