கனடிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னே லிபரல் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
கட்சியின் விசேட ஆலோசகரா அவர் இணைந்து கொண்டு உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கனடிய லிபரல் கட்சி அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி துறையில் மார்க் என்று தனது பங்களிப்பினை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கட்சியின் திட்டங்கள் மற்றும் கொள்கை வகுப்பில் பங்களிப்பு வழங்குவார் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக அரசியலில் இணைந்து கொள்ளுமாறு கர்னே அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் தற்பொழுது அவர் அந்த அழைப்பினை ஏற்றுக் கொண்டுள்ளதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைபெற உள்ள லிபரல் கட்சி கூட்டத்திலும் கர்னே பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.