ஒன்ராறியோ மாகாணமும், கனேடிய மத்திய அரசும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு 13.2 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான குழந்தைகள் பராமரிப்புநலத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்துள்ளன.
குழந்தைகளை பகல் நேரக் காப்பகங்களில் விடும் பெற்றோருக்கு உதவும் வகையில் திட்டம் ஒன்றை அரசு அறிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று ஒன்ராறியோ பிரீமியரும், கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும் இத்திட்டம் குறித்த அறிவிப்பை ஒன்ராறியோ மக்களுக்கு வெளியிட்டார்கள்.
அதன்படி, ஏப்ரல் 1 முதல், உரிமம் பெற்ற பகல் நேர குழந்தைகள் காப்பகங்களில் குழந்தைகளை விட, நாளொன்றிற்கான கட்டணம் 25 சதவிகிதம் குறைக்கப்பட்டு 12 டொலர்களாக ஆக்கப்பட உள்ளது.
பின்னர், டிசம்பர் மாதத்திலிருந்து மீண்டும் இந்தக் கட்டணம் குறைக்கப்பட உள்ளது.
தற்போது, பகல் நேர குழந்தைகள் காப்பகங்களுக்கு மக்கள் நாளொன்றிற்கு 46 டொலர்கள் கட்டணம் செலுத்துகிறார்கள்.
இந்தத் தொகை சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு, 2025 வாக்கில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பகல் நேர குழந்தைகள் காப்பகங்களில் விட, நாளொன்றிற்கு 10 டொலர்கள் மட்டுமே செலுத்தும் நிலை உருவாகிவிடும் என மாகாண அரசு எதிர்பார்க்கிறது.
இதனால், ஒன்ராறியோ குடும்பங்கள் மட்டுமின்றி கனடா முழுவதிலுமுள்ள குடும்பங்கள், ஆண்டொன்றிற்கு 6,000 டொலர்கள் வரை மிச்சம் பிடிக்கலாம் என்று கூறியுள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!