Reading Time: < 1 minute

கனடாவில் தற்பொழுது அறவீடு செய்யப்பட்டு வரும் பொருட்கள் சேவைகள் வரி குறிப்பிட்ட காலத்திற்கு விலக்கு அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆளும் லிபரல் கட்சியும் என்.டி.பி கட்சியும் இது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி எதிர்வரும் புத்தாண்டு, நத்தார் பண்டிகையை காலப்பகுதியில் கனடிய நுகர்வோருக்கு இந்த சலுகை வழங்கப்பட உள்ளது.

சுமார் இரண்டு மாத காலத்திற்கு இவ்வாறு வரி சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற ஏதுக்களினால் சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சில வகைப் பொருட்களுக்கு இந்த வரி விலக்கு அறிவிக்கப்பட உள்ளது.

பியர், வைன், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு இவ்வாறு வரிச் சலுகை வழங்கப்பட உள்ளது.

அரசாங்கத்தின் இந்த திட்டத்திற்கு ஆதரவளிக்கப்படும் என என்.டி.பி கட்சி தெரிவித்துள்ளது.