Reading Time: < 1 minute
கனடிய மக்களின் நிதிசார்ந்த தகவல்கள், கனடிய அரசினால் அமெரிக்க அரசுடன் பகிரப்படும் அளவு வெகுவாக உயர்வடைந்துள்ளமை தொடர்பில், கனடிய இறையாண்மையை பாதுகாப்பதற்கான கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு இருநாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது முதல், இவ்வெண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக அது சுட்டிக்காட்டியுள்ளது.
வரி அறவிடும் நோக்கங்களுக்காக, கனடிய வருமானவரி திணைக்களத்தால், 2014ஆம் ஆண்டு, ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனடியர்களின் நிதிசார் தரவுகள், அமெரிக்க உள்ளக வருமானவரி திணைக்களத்துடன் பகிரப்பட்டிருந்தன.
இவ்வெண்ணிக்கை, இவ்வாண்டு 9 லட்சமாக அதிகரித்துள்ளதாக கனடிய இறையாண்மையை பாதுகாப்பதற்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கடந்த 5 ஆண்டுகளில், 2.6 மில்லியன் கனடியர்களின் தகவல்கள், கனடிய அரசினால் அமெரிக்க அரசிடம் வழங்கப்பட்டுள்ளன.