Reading Time: < 1 minute
கனடிய மத்திய வங்கி இன்றைய தினம் வட்டி வீதங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது.
மேலும் நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்த எதிர்வு கூறல்களும் வெளியிடப்பட உள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் கனடிய மத்திய வங்கி மூன்று தடவைகள் வங்கி வட்டி வீதங்களை குறைத்துள்ளது.
தற்பொழுது வங்கி வட்டி வீதம் 4.25 வீதமாக காணப்படுகிறது. இன்றைய தினம் இந்த வட்டி வீதம் மேலும் குறைக்கப்படும் என பொருளியல் நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
பெரும்பாலும் இன்றைய தினம் பூச்சியம் தசம் ஐந்து வீதம் அளவில் வட்டி வீதம் குறைக்கப்படலாம் என எதிர்ப்பு கூறப்பட்டுள்ளது.