கனடாவிலும் மற்றும் உலகம் முழுவதும் இன்று தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இன்று கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள இந்து, ஜெயின், சீக்கிய மற்றும் பௌத்த சமூகங்களுடன் இணைந்து தீபத் திருவிழாவான தீபாவளியைக் கொண்டாடுகிறோம்.
இந்த மகிழ்ச்சியான பண்டிகை இருளின் மீது ஒளியின் வெற்றியைக் கொண்டாடுகிறது. சுதந்திரம், நம்பிக்கை மற்றும் அறிவு ஆகியவற்றின் சக்தியாக இந்தப் பண்டிகை உள்ளது.
இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில் குடும்பங்களும் நண்பர்களும் பொதுவாக விருந்துபசாரங்களுடன் பரிசுகளை பரிமாறிக்கொள்வர். அத்துடன் பிரார்த்தனைகளில் ஒன்று கூடுவார்கள். தங்கள் வீடுகளில் தீபங்களால் விளக்கேற்றுவார்கள்.
ஒருவரையொருவர் நம்மையும் நமது சமூகங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க பொது சுகாதார வழிகாட்டுதல்களை இந்த ஆண்டும் நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவதால் மக்கள் இந்த மகிழ்ச்சியான பண்டிகையை வீடுகளில் அமைதியாகக் கொண்டாடுவார்கள் என்பதை நான் அறிவேன். தீபாவளி என்பது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும், வலுவான மற்றும் துடிப்பான சமூகங்களை உருவாக்குவதற்கும் உதவும் ஒரு வாய்ப்பாகும்.
அனைத்து கனடியர்கள் சார்பாக, சோபியும் நானும் கனடாவிலும் மற்றும் உலகம் முழுவதும் தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்றுள்ளது.