கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியை சேர்ந்த சில தரப்பினர் பிரதமர் ட்ரூடோ பதவி விலக வேண்டுமென கோரி உள்ளனர்.
பிரதமர் பதவி விலகுவதற்கு இதுவே பொருத்தமான தருணம் என கட்சியின் சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் லிபரல் கட்சிக்குள் பிரதமருக்கான ஆதரவு மாறுபட்ட அடிப்படையில் காணப்படுகின்றது.
வர்த்தக அமைச்சர் மேரி நாக் பிரதமர் தொடர்ந்தும் பதவியில் நீடிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
ஆசியான் மாநாட்டில் பிரதமருடன் மேரி நாக் லாவோசிற்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாம் ஒரு லிபரல் கட்சி உறுப்பினர் எனவும் பிரதமரின் மீது பூரண நம்பிக்கை தமக்கு உண்டு எனவும் அமைச்சர் நெக் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் லிபரல் கட்சி பின்னடைவை சந்தித்திருந்தது.
இவ்வாறான ஒரு பின்னணியில் நாளுக்கு நாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிரான நிலைப்பாடுகள் அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.