Reading Time: < 1 minute

கனடிய பட்டய கணக்காளர் ஒன்றியம், (சீ.பீ.ஏ) தனது ஒன்டாரியோ மற்றும் கியூபெக் நிறுவனங்களுடன் கல்வி, தேர்வுகள் மற்றும் கணக்கியல் தொழிலுக்கான தரநிலை தொடர்பில் இணக்கப்பாடுகளை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

சிபிஏ ஒன்டாரியோ மற்றும் கியூபெக் சிபிஏ ஆர்டர் ஆகியவை தேசிய அமைப்பிலிருந்து டிசம்பர் 20 அன்று அதிகாரப்பூர்வமாக விலகிக் கொள்வதாக அறிவிக்கப்படுகிறது.

ஜூன் 2023 இல் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட பிளவு பற்றிய செய்தி, கியூபெக் மற்றும் ஒன்டாரியோவில் உள்ள பட்டய கணக்காளர் ஒன்றியங்கள், தேசிய அமைப்பின் எதிர்காலப் பங்கு பற்றிய கேள்விகளை எழுப்பியிருந்தது.