கனடாவில் ராணுவப் படையினர் மத்தியில் கடுமையான வறுமை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அநேகமான படையினர் தங்களது வாழ்க்கைச் செலவுகளை ஈடு செய்ய முடியாது அவதியறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அதிக எண்ணிக்கையிலான படையினர் உதவிகள் கோரி நிற்கும் நிலை காணப்படுவதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் Wayne Eyre தெரிவித்துள்ளார்.
லாப நோக்கமற்ற நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் படையினருக்கு உதவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சில படையினர் குறிப்பிட்ட சில பகுதிகளில் சேவையாற்றுவதற்கு விரும்புவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தற்பொழுது வழங்கப்படும் வீட்டு கொடுப்பனவு போதுமானதாக இல்லை என படையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பளத்தின் அடிப்படையில் வீட்டுக் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் சேவையில் நிறுத்தப்பட்டுள்ள பிரதேசத்தின் அடிப்படையிலேயே இந்த கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான படையினர் வீட்டு பிரச்சனையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், கனடாவில் ராணுவத்தில் ஆளணி வள பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.