Reading Time: < 1 minute

கனடாவின் கியூபிக் மாகாண நீதிமன்ற தீர்ப்பு குறித்து பெண் ஒருவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

25 வயதான தமது மகளை வாகனத்தில் மோதி கொன்ற நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து அவர் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நபர் ஒருவர் தமது மகளை வாகனத்தில் மோதி தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் ஆறில் ஒரு பகுதியை மட்டும் குறித்த நபர் சிறையில் கழித்து உள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

தமது மகளை கொன்றவர் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டமையை கேள்வியுற்றதும் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையையும், மன அழுத்தத்தையும் எதிர் நோக்கியதாக ஏலியன் டெல் என்ற குறித்த பெண் தெரிவிக்கின்றார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி இந்த வாகன விபத்து சம்பவம் இடம்பெற்றது.

தனது மகளுடன் மிக நெருங்கிய பிணைப்பை கொண்டிருந்ததாகவும் அவரது இழப்பு தமது வாழ்வையே மாற்றி விட்டதாகவும் அந்தப் பெண் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, குற்றம் சுமத்தப்பட்ட நபர் எவ்வித குற்ற செயல்களிலும் அதற்கு முன்னர் ஈடுபட்டிருக்கவில்லை என்ற அடிப்படையில் அவருக்கு பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரான ரெய்மன்ட் என்பவர் ஐந்து மாதங்கள் மட்டுமே சிறையில் தண்டனை அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.