கனடாவின் நாணயத்தாள்களில் பிரபல மரதன் ஓட்ட வீரர் டெரி ஃபாக்சின் (Terry Fox) உருவம் அச்சிடப்பட உள்ளது. ஐந்து டாலர் நாணயத்தாள்களில் ஃபாக்சின் உருவப்படம் அச்சிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய மத்திய அரசாங்கம் மரதன் ஓட்ட வீரர் பாக்ஸை கௌரவிக்கும் வகையில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
கனடாவிற்கு ஆற்றிய சேவைகளை கௌரவப்படுத்தும் வகையில் நாணயத்தாளில் உருவப் படத்தை அச்சிட தீர்மானிக்கப்பட்டது.
அந்த வகையில் குறித்த நாணயத்தாளில் உருவப் படத்தை அச்சிடுதல் தொடர்பில் சுமார் 600 பரிந்துரைகள் முன்மொழிக்கப்பட்டன.
இவ்வாறான பரிந்துரைகளில் பொக்ஸின் பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
தெறி பொக்ஸின் உருவப்படத்தை தெரிவு செய்தமைக்காக நன்றி பாராட்டுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
கனடிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பொக்ஸ் பல்வேறு சவால்களை சந்தித்த போதிலும் மரதன் ஓட்ட போட்டிகளில் பங்கேற்று தனது அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.
இது ஏனையவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக காணப்படுகின்றது. பல்வேறு நெருக்கடிகள் வந்த போதிலும் அவர் தனது இலக்கினை எட்டுவதற்கு அயராது உழைத்தார்.
புற்றுநோயை இல்லாது ஒழிப்பதற்காக பல்வேறு நாடுகளில் மரதன் ஓட்ட போட்டிகளில் பங்கேற்று அவர் சுமார் 800 மில்லியன் டொலர்களை திரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1958ம் ஆண்டு பிறந்த டெரி பொக்ஸ், 1981ம் ஆண்டில் புற்று நோய் காரணமாக மரணித்தார்.
பொக்ஸை கௌரவிக்கும் வகையில் பல்வேறு வீதிகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.