Reading Time: < 1 minute

கனடிய சனத்தொகை கட்டமைப்பில் ஏற்படப் போகும் மாற்றம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எதிர்வரும் சில ஆண்டுகளில் வயது முதிர்ந்தவர்களின் சனத்தொகை உயர்வடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக எதிர்வரும் இரண்டு தசாப்த காலத்தில் வயோதிப சனத்தொகைப் பரம்பல் வெகுவாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனத்தொகை பரம்பலில் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டிற்கு பெரும் சவால்களை உருவாக்கும் என சுடு;டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊழியப்படை, சுகாதார செலவுகள், ஓய்வூதியக் கொடுப்பனவுகள், பராமரிப்பு செலவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு இந்த சனத்தொகைப் பரம்பல் மாற்றமானது சாதகமான விளைவுகளையும், பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும் என சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

கனடாவில் 65 வயதுக்கும் மேற்பட்ட சனத்தொகையானது சுமார் 76 லட்சமாக உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.