கனடாவின் சந்தைகளில் இருந்து டொயோட்டா மற்றும் போர்ட் ரக வாகனங்கள் சில மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய போக்குவரத்து நிறுவனம் குறித்த வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டொயோட்டா நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் நான்கு மாடல் வாகனங்கள் இவ்வாறு சந்தையிலிருந்து மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது.
கடந்த 2023 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை இவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
டொயோட்டா டொமெகா,டொயொட்டா ஹைலண்டர், டொயொட்டா கொரோலா மற்றும் டொயொட்டா க்ரோஸ் ஆகிய நான்கு மாடல்களே இவ்வாறு சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாகனங்களின் ஸ்டியரிங் ஏர்பேக் போன்ற சிலவற்றில் காணப்படும் குறைபாடுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை,போர்ட் நிறுவனத்தின் சில வகை மாடல்களும் சந்தையில் இருந்து மீள பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.