Reading Time: < 1 minute

கனடாவில் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் குடியுரிமையை ரத்து செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

62 வயதான அகமத் முஸ்தபா எல்டிடி என்ற நபரே இவ்வாறு கனடிய குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 26 வயதான முஸ்தபா எல்டிடி என்ற அவரது மகனும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இருந்தார்.

இந்த இருவருக்கு எதிராகவும் 9 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான ஓர் பின்னணியில் 62 வயதான முஸ்தபா எல்டிடியின் கனடிய குடியுரிமையை ரத்து செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டுக்கு வெளியே தாக்குதல் சம்பவம் ஒன்றில் தொடர்பு பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடிய மக்கள் இந்த சம்பவம் தொடர்பிலான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற குழு ஒன்று விசாரணை நடத்த உள்ளது.

போலியான தகவல்களை வழங்கி கனடிய குடியுரிமை பெற்றுக் கொண்டவர்களது, குடியுரிமையை ரத்து செய்ய சட்டத்தில் இடம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் குறித்த நபரின் குடியுரிமையை ரத்து செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.