கனடாவில் இந்த கோடை காலத்தில் வழமைக்கு மாறான அடிப்படையில் கூடுதல் வெப்பநிலையை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த முன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சராசரியாக கோடைகாலத்தில் காணப்படும் வெப்பநிலையை விடவும் இந்தக் கோடை காலத்தில் கூடுதல் வெப்பநிலை நிலவும் என கனடிய சுற்றாடல் திணைக்களத்தின் வானியல் ஆய்வாளர் ஜெனிபர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
கோடைகால மாதங்களில் தொடர்ச்சியாக வெப்பநிலை அதிகரித்து செல்லும் போக்கு பதிவாகும் என அவர் எதிர்வு கூறியுள்ளார்.
இந்த கோடை காலத்தில் காலநிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும் எனவும் வெப்ப அலை ஏற்படலாம் எனவும் சில சந்தர்ப்பங்களில் குளிருடனான காலநிலை நிலவும் எனவும் அவர் எதிர் கூறியுள்ளார்.
பொதுவாக அதிக வெப்பநிலையான வறட்சியான ஒரு காலநிலை எதிர்வரும் நாட்களில் நீடிக்கும் எனவும் அதற்கு மக்கள் ஆயத்தமாக இருப்பது பொருத்தமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காட்டு தீ பரவுகை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த பருவ காலத்தில் காலநிலை மாற்றங்கள் நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.