கனடாவின் எல்லைப் பகுதிகளில் வெளிநாட்டு பயணிகள் தொடர்பில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எல்லை பகுதிகளில் ஊடாக கனடாவிற்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு பயணிகள் தொடர்பில் கூடுதல் சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய எல்லைப் பாதுகாப்புச் சேவை முகவர் நிறுவனம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
கனடாவிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் வெளிநாட்டவர்கள் பலர் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குடிவரவு விவகாரங்கள் தொடர்பில் கனடிய மத்திய அரசாங்கம் மீது அண்மைய நாட்களாக விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதிகளில் வெளிநாட்டு பிரஜைகள் உட்பிரவேசிப்பது கடுமையாக்கப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் என்று நாட்டுக்குள் பிரவேசிப்பவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு மாத காலப்பகுதியில் சராசரியாக சுமார் 4000 வெளிநாட்டு பயணிகள், கனடிய எல்லை பகுதிகளில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.