கனடிய ஊடகங்கள் தார்மீகப் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஒட்டாவா பார்ஹெவன் பகுதியில் இலங்கைக் குடும்பம் ஒன்று படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் குறித்து பாராட்டியுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பங்கேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு இலங்கைர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பேர்பியோ டி சொய்சா என்ற 19 இலங்கை இளைஞர் மீது இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடிய ஊடகங்கள் இந்த சம்பவம் தொடர்பிலான செய்தி அறிக்கையிடலை மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் குற்றம் சுமத்தப்பட்டவரின் குடும்பங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செய்தி அறிக்கையிடப்பட்டதாகத் தெரிவித்துளார்.
இலங்கையில் இவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெற்றிருந்தார் உயிரிழந்தவர்களின் அனைத்து குடும்ப விரபங்களையும் வெளியிட்டு அந்தக் குடும்பங்களை சிரமத்தில் ஆழ்த்தியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்ற போது ஒரேயொரு குடும்ப புகைப்படத்தை மட்டும் கனடாவின் சில ஊடகங்கள் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் போலிச் செய்திகள் பரப்பபடுதல் மற்றும் இவ்வாறான சந்தர்ப்பங்களின் குற்றம் சுமத்பத்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் அந்தரங்கத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டள்ளதாகத் தெரிவித்துள்ளார்.