Reading Time: < 1 minute
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக மற்றும் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்றில் முன் வைத்துள்ளார்.
கூட்டணி கட்சியான என்.டி.பி கட்சி லிபரல் கட்சிக்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக் கொள்வதாக வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
என்.டி.பி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் வெளியிட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பொலியேவ் சமர்ப்பித்துள்ளார்.
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது.