செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பல கனயடியர்கள் பயன்படுத்துவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
கனடாவில் 30 விதமானவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓராண்டுக்கு முன்னர் இருந்த நிலையை விடவும் தற்பொழுது அதிக எண்ணிக்கையிலானவர்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
18 முதல் 34 வயது வரையிலான கனடியர்கள் அதிக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அன்றாடம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறைவாக காணப்படுகின்றது.
சிலர் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றோம் என்பது பற்றிய அறிவு இன்றியே செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இளம் தலைமுறையினர் சட் போர்ட்ஸ் போன்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பிரயோகம் பற்றி கூடுதல் அறிவினை கொண்டிருப்பதாக ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு பயன்பாடானது தங்களது எதிர்கால தொழில் களுக்கு சவால்களை ஏற்படுத்தும் என்ற எண்ணப்பாடு பெரும் எண்ணிக்கையிலான கன்னடியர்கள் மத்தியில் நீடித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செயற்கையை தொழில்நுட்பம் உணர்ச்சியற்றது எனவும் மனிதரின் தொழில்களுக்கே ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் சில தீர்மானங்கள் பாதகமாக முடியும் எனவும் ஒரு தரப்பினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
லெஜெர் போல்ஸ் என்னும் நிறுவனத்தினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.