Reading Time: < 1 minute

கனடாவின் பிரின்ஸ் ஆப் எட்வெர்ட் தீவு (PEI) பகுதியில் மாணவர்கள் வகுப்பறையில் அலைபேசியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டில் இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரின்ஸ் ஆப் எட்வர்ட் மாகாண அரசாங்கம் இது தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

வகுப்பறைகளில் மாணவர்கள் அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு எனினும் தரம் 7 முதல் 12 வரையிலான மாணவர்கள் கல்வியியல் நோக்கத்திற்காக அலைபேசிகளை பயன்படுத்துவதற்கு ஆசிரியர்கள், அனுமதி வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அலைபேசியை கொண்டு மோசமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அதனை தடுப்பதற்கு இவ்வாறு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விசேட தேவையுடைய மற்றும் மருத்துவ தேவையுடைய மாணவர்கள் அலைபேசி பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நியூ பிரவுன்ஸ்விக், நோவா ஸ்கோசியா போன்ற பகுதிகளில் அலைபேசியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது